css3menu.com

CSS Hover Menus by Css3Menu.com

You are Here :- About Us >Surveyor Genaral's Message

Surveyor Genaral's Message

 

1800ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வரையும் அதே தோற்றத்துடன் விளங்குகின்ற இலங்கை நில அளவைத் திணைக்களமானது நில அளவைகள் படமாக்கலின் தேசிய நிறுவனமாகப் பணியாற்றுவதுடன் அந்த குறிப்பிட்ட பொறுப்பினை தேசத்திற்கு செவ்வனே​ செய்து​ வருகின்றது. இது ஒரு பொது நிறுவனமாக தொடர்ச்சியாக 217 வருடங்கள் சேவையாற்றுகின்றது என்பது  பெருமைக்குரிய விடயமாகும்.

 நில அளவைத்திணைக்களமானது இலங்கையின் அதிகமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னோடியாக திகழ்ந்திருக்கின்றது. அவ்வாறான  சில முக்கிய பங்களிப்புகளாக காணி நிர்ணயத்திற்கான அளவை, காணி அபிவிருத்திக்கான அளவை, காணி சீர்திருத்தத்திற்கான அளவை, மகாவலி அபிவிருத்தித் திட்டம், கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம், தெற்கு நெடுஞ்சாலைத் திட்டம், தெற்கு துறைமுக அபிவிருத்தித் திட்டம், தெற்கு விமான நிலைய நிர்மானத் திட்டம், மின் உற்பத்தித் திட்டங்கள், புவிப்பார்த்தல் பாலனப் புள்ளிகளின் வலையமைப்பினை நிறுவியதுடன் உலகளாவிய தானமிடும் முறைமையினை (GPS) அறிமுகத்துடன் அதன் நுட்ப நிலையை தரமுயர்த்தியமை, தேசப்படத்தினை மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) வெளியிட்டமை, முழு நாட்டிற்குமான ஒரு அங்குலத்திற்கு ஒரு மைல் என்ற தேசப்படத் தொடரினை வெளியிட்டமை, பின்னர் இது 1 : 50,000 என்ற பிரதேசவியற் படத்தொடர் மூலம் மாற்றீடு செய்யப்பட்டமை, நாட்டின் 80% மான பகுதியை உள்ளடக்கிய 1:10,000 என்ற பிரதேசவியற் படத் தொடரினை வெளியிட்டமை, கொழும்பிற்கும் மற்றும் புற நகர்ப்புறங்களுக்குமான 1:2,000 என்ற நகரப் படங்களை வெளியிட்டமை, 1:25,000, 1:50,000, 1:10,000 என்ற அளவிடைகளில் பிரதேசவியல் எண் முறைத் தகவல்த் தளங்களை உருவாக்கியமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2004ம் ஆண்டின் சுனாமியின் பின்னர் எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கியமான பணிகளில் ஒன்றான நிவாரணப்பணிகளிலும், புனர் வாழ்வுப் பணிகளிலும் செயற்றிறன் மிக்கதும், பயனளிக்கக்கூடியதுமான தீர்மானங்களை  எடுப்பதற்கு உதவியாக   கரையோரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை படமாக்கல் செய்வதாகும். அரசாங்கத்தின் புதிய அபிவிருத்திக் கோட்பாட்டிற்கு  அமைய திணைக்களத்தின் தற்போதைய முக்கியமான நடவடிக்கைகளாக பிம்சவிய திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு காணித் துண்டிற்கும் திருத்தமான காணி உரித்துப் பத்திரம் வழங்குவதற்காக அவற்றை அளந்து படமாக்கல் செய்து தகவல் தளங்களில் உள்வாங்குதல், வடக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு பங்களிப்பு செய்தல், நாட்டின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றம் செய்வதற்காக காணி சுவீகரிப்பு, மீள் குடியேற்ற அளவைபோன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும், நில அளவைத் திணைக்களமானது புவியியல் தகவல் துறையைக் கையாள்வதிலும் நிர்வகிப்பதிலும் புதிய தொழில்நுட்பத்துடன் வளமூட்டப்பட்டிருக்கின்றது. தேசத்தின் நலன்கருதி நாட்டின் அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கு வழிகோள்களாக ஏற்படுகின்ற வியப்பிக்கத்தக்க தொழில்நுட்ப மாற்றத்தை சமாளிப்பதற்காக திணைக்களமானது எல்லா நேரங்களிலும் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றது.

 நில அளவைத் திணைக்களமானது அதன் ஊழியர்களை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் தொழிலின் உயர்ந்த சம்பிரதாயங்களை மேம்படுத்தி தங்களின்  சேவைகளை நாட்டின்    அபிவிருத்திக்காக மேற்கொள்வதற்கு வழிகாட்டுகின்றது.

 இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 47 ஆவது நில அளவையாளர் நாயகமாக இந்தச் செய்தியை வழங்குவதற்கு நான் சிறப்புரிமையளிக்கப்பட்டுள்ளேன்.

 

பி.எம்.பி.உதயகாந்த
நில அளவையாளர் நாயகம்       
        

 

தகவல் விழிப்பு
Survey Department Of Sri Lanka


>>
Three awards received by the Survey Department in National Productivity Award Competition in 2015.

1.Provincial Surveyor General Office-North Western - 3rd Place

2.Surveyor Generals Office - Special Commendation

3.Institute of Surveying & Mapping - Special Commendation
                                                2017-01-03

 
Untitled Document

 

© முழுப்பதிப்புரிமை-2014 நில அளவைத்திணைக்களம் - இலங்கைக்குரியது